உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி குடியிருப்பு மேம்பாலம் அருகே, அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜாசேர்வை தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சீத்தப்பட்டி குடியிருப்பு இந்திரா நகரை சேர்ந்த ஜெய்கணேஷ், 44, என்பவர் அரசு அனுமதி இன்றி, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசார் சோதனையிட்டு, 4,680 ரூபாய் மதிப்புள்ள, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜெய்கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி