உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் லேப்டாப் திருடியவர் கைது

கரூர் பஸ் ஸ்டாண்டில் லேப்டாப் திருடியவர் கைது

கரூர், கரூர் பஸ் ஸ்டாண்டில், வாலிபரிடம் லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு ஆத்துார் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன், 30, தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து, பஸ்சில் கரூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். அப்போது, அவர் வைத்திருந்த லேப்டாப்பை காணவில்லை. இதுகுறித்து, கதிரேசன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, விசாரணை நடத்திய கரூர் டவுன் போலீசார், லேப்டாப்பை திருடிய திருச்சி மணச்சநல்லுாரை சேர்ந்த மாதவன், 34, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி