டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே பண்ணப்பட்டி பகுதியில், வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தில் இருந்து, தடுமாறி கீழே விழுந்-தவர் உயிரிழந்தார்.அரவக்குறிச்சி அருகே அம்மாபட்டி அடுத்த சோழதாசன்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அழகர், 52. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பள்ளப்பட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பண்ணப்பட்டி அருகே வந்தபோது, வாகனத்தை வேக-மாக இயக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனையில் அனும-தித்தனர். சிகிச்சை பலனின்றி நேறறு முன்தினம் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.