உயர் மின் கம்பத்தில் எரியாத விளக்குகள் இருளில் மூழ்கும் மனோகரா கார்னர்
கரூர், அக். 24-கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர் பகுதியில், உயர்மின் கம்பத்தில், விளக்குகள் சரிவர எரிவது இல்லை. கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலை, திருச்சி சாலை, ஜவஹர் பஜார் சாலை மற்றும் தின்னப்பா கார்னர் சாலை பிரியும் இடத்தில், மனோகரா கார்னில் நான்கு பகுதிகளிலும், தானியங்கி சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், மனோகரா கார்னரில் உள்ள ரவுண்டானாவில், உயர்மட்ட கம்பத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான விளக்குகள் எரிவது இல்லை. மேலும், பஸ் ஸ்டாண்ட் சாலை, கோவை சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்களிலும், முழுமையாக விளக்குகள் எரிவது இல்லை. இதனால், மனோகரா கார்னர் பகுதி இரவு நேரத்தில் பல நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. வரும், 31 ல் தீபாவளி பண்டிகைக்காக, புத்தாடைகள் வாங்க, ஜவஹர் பஜாருக்கு பொதுமக்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மனோகரா கார்னரில் உள்ள, உயர்மட்ட கோபுரத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், திருட்டு சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே, மின் விளக்குகளை இரவு நேரத்தில் எரியும் வகையில், கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செயல்படாத நீரூற்றுகரூர் மனோகரா கார்னர் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ள, இடத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை உள்ளது. அதை சுற்றி, 13 லட்ச ரூபாய் செலவில் பல மாதங்களுக்கு முன், நீரூற்று அமைக்கப்பட்டது. ஆனால், அந்த நீரூற்று செயல்படவில்லை. மேலும், உயர்மட்ட கோபுரத்தில், மின் விளக்குகளும் எரியாததால், கரூர் நகர பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.