நவ.,1ல் மாரத்தான் போட்டி
கரூர், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நவ., 1ல், மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டி, செப்., 29ல் நடக்கவிருந்த நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது.இப்போட்டி வரும் நவ., 1ல் காலை 7:00 மணிக்கு நடக்கிறது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடக்கிறது.17 முதல் 25 வயதிற்குபட்ட பெண்கள், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் நடக்கிறது. 17 முதல் 25 வயதிற்குபட்ட ஆண்களுக்கு- 8 கி.மீ., துாரம், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு,- 10 கி.மீ., துாரம் நடக்கிறது.போட்டியில் கலந்து கொள்வோர் வரும், 31 மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 74017 03493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.