மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., விஸ்வநாதபுரம் சுப்பன் ஆசாரி களம் கிராமத்தில் மகா மாரியம்மன், விநாயகர், கருப்பண்ணசாமி, நாகர் ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆக., 27ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று காலை கோமாதா பூஜையுடன் இரண்டு கால யாக பூஜை நடந்தது, பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கும்பத்தை, கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் பக்தர்கள மீது புனிதநீர் தெளிக்ககப்பட்டது, தொடர்ந்து மூலவர் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.