மயில் வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா
கரூர், கரூர், மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி, மயில் வாகனத்தில் அம்மன் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. 16ல் பூச்சொரிதல், 18ல் காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ரிஷபம், புலி உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. கடந்த, 28ல் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நடந்தது. நேற்று மயில் வாகனத்தில், அம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். வரும், 8ல் அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.