உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருதுார் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்

மருதுார் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்

மருதுார் டவுன் பஞ்.,சாதாரண கூட்டம்குளித்தலை, அக். 11-குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கூட்டரங்கத்தில் சாதாரண கூட்டம் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானு ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். இதில் செலவினங்கள் உட்பட, மருதுார் ரயில்வே குகை வழிப்பாதையை விரைந்து முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி