உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம்

மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை, மயிலாடுதுறை திருக்கைலாய பரம்பரை தருமையாதீனம், 27வது குரு மகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அவருடன், 30 சிவனடியார்கள் வந்தனர். தமிழகத்தில் பாடல் பெற்ற சிவாலயங்களுக்கு, மார்கழி மாதம் தோறும் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், நேற்று அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவனடியார்கள் உடன் வந்தார். பின்னர், ஆதீனம் சுவாமி தரிசனம் செய்த பின், அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை