மேலும் செய்திகள்
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
09-Sep-2024
கிருஷ்ணராயபுரம்: மாயனுார், காவிரி ஆற்றில் நீர் இருப்பதால் கடல் போல் காட்சிய-ளிக்கிறது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்-றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே கத-வணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை வழியாக, காவிரி நீர் சேமிக்கப்பட்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் ஷட்டர் வழியாக திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் செல்கிறது. கடந்த மாதம் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாக, கதவணை வழி-யாக அதிகமான நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது, 21 ஆயிரத்து, 690 கன அடி காவிரி நீர் வருகிறது. இதில் வாய்க்கால் பாசனத்திற்கு போக, 20 ஆயிரத்து, 275 கன அடி நீர் காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. நீர் வரத்து காரணமாக மாயனுார் கதவணை பகுதியில், காவிரி நீர் கடல் போல் தேங்கி வருகிறது. இதனை கண்டு ரசிக்க, கரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்-கின்றனர்.
09-Sep-2024