மேலும் செய்திகள்
8,316 பிச்சைக்காரர்கள் நான்கு ஆண்டில் மீட்பு
26-May-2025
கரூர், சாலையில் சுற்றித்திரிந்த, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, சாந்திவனம் மனநல காப்பகத்தினர் மீட்டனர்.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, ஆட்டம்பரப்பில், 15 நாட்களுக்கு மேலாக, 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித்திரிந்தார். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாகவும், சில கடைகள் மீது கற்களை வீசி சேதாரம் ஏற்படுத்தி வந்துள்ளார். அந்த பெண்மணியை மீட்டு, சிகிச்சை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உதவியுடன், சாந்திவனம் மன நல காப்பக இயக்குனர் அரசப்பன் தலைமையில் குழுவினர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். பின், திருச்சி தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26-May-2025