ஊராட்சி அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட, வேலம்-பாடி ஊராட்சியில் உள்ள சௌந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து கேட்-டறிந்தார். பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்-ளிகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் மகேஷ், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று அரவக்கு-றிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட, வேலம்பாடி ஊராட்-சியில் உள்ள செளந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சிறிது நேரம் ஆசிரியராக மாறிய அமைச்சர், தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை குறித்து வகுப்பு எடுத்தார். மேலும் மாணவர்கள் சேர்க்கை, வருகை பதிவேடு, சமையல் கூடம், காலை உணவு திட்டம், குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். எந்தவித முன்னறி-விப்பும் இன்றி, அமைச்சர் திடீர் ஆய்வு மேற்-கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.