உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

குளித்தலை :குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்., செம்பாறை கல்லுப்பட்டியில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, புதிய வழித்தட டவுன் பஸ் தொடக்க விழா நடந்தது. எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்து, டவுன் பஸ்சை துவக்கி வைத்தார். இந்த பஸ், நாட்டார் கோவில்பட்டி வழியாக செம்பாறை, கல்லுப்பட்டி வரை வந்து செல்லும். இந்த புதிய வழித்தட பஸ்சை கிராம மக்கள் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும் என, கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். பஞ்., முன்னாள் தலைவர்கள் கழுகூர் முத்துசாமி, கூடலுார் அடைக்கலம், கள்ளை கருப்பையா உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள், அரசு போக்குவரத்து பணிமனை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !