உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் ரூ.1.69 கோடியில் நீச்சல் குளம் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை

கரூரில் ரூ.1.69 கோடியில் நீச்சல் குளம் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை

கரூர்: கரூரில், 1.69 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள நீச்சல் குளத்-திற்கு, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே, நீச்சல் குளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். மாவட்-டத்திலுள்ள மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்-பெறும் வகையில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில், 2025--26ம் நிதியாண்டு கல்வி நிதியிலிருந்து, 1.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது.இங்கு, 25 மீட்டர் நீளத்திலும், 17 மீட்டர் அகலத்திலும், 22,535 சதுரடி அளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நீச்சல் குளம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணி, 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, மண்டலக்குழு தலை-வர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ