நாளை ஆசிரியர் தகுதி தேர்விற்கு மாதிரி தேர்வு
கரூர், தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்கொள்ளும் வகையில், மாதிரி தேர்வு நாளை நடக்கிறது என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வரும், 15, 16 ஆகிய நாட்கள் நடக்கிறது. மாணவ, மாணவியருக்கு தேர்வினை சிறந்த முறையில் எழுதி வெற்றி பெற வழிவகுக்கும் வகையில், மண்டல அளவிலான முழு மாதிரி தேர்வு நாளை (8ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், 6383050010, 8973160980 என்ற எண்களில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.