கிருஷ்ணராயபுரத்தில் கொசு ஒழிப்புப்பணி
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பகவதியம்மன் கோவில் தெருவில், மழை காலங்களில் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில், டவுன் பஞ்சாயத்து சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.வீடுகளில் தேவையில்லாத கழிவு குப்பை அகற்றுதல், பிளாஸ்டிக் கழிவு, பழைய டயர்கள், கொட்டாங்குச்சி, தென்னை மரக்கழிவு குப்பை அகற்றப்பட்டது. கழிவுநீர் செல்லும் வழித்தடங்களில் துாய்மை பணி செய்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இப்பணிகளில் டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவுலர் வெங்கடேசன், சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் ஆகியோர் பார்வையிட்டனர்..