தாசில்நாயக்கனுாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:சிவாயம் பஞ்சாயத்து பகுதிகளில், பொது சுகாதாரதுறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, தாசில்நாயக்கனுார் கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், குடியிருப்பு பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பழைய கழிவு பொருட்களை அகற்றுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கொசு உற்பத்தி கண்டறிந்து அதனை தடுப்பதற்காக பிளிச்சீங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் நடந்தன. இந்த பணிகளில், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த கொசு ஒழிப்பு மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர்.