மேலும் செய்திகள்
தெரு நாய்கள் தொந்தரவு கட்டுப்படுத்த கோரிக்கை
08-Sep-2025
கரூர்: தேசிய நெடுஞ்சாலைகளில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.கரூர் மாநகராட்சி மட்டுமின்றி, புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கரூரில் இருந்து சேலம், மதுரை, திருச்சி ஆகிய தேசிய நெடுஞ் சாலை-களில் கூட்டம் கூட்டமாக, நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த சாலையில், திடீரென குறுக்கிடுவதால் வாகன ஓட்டிகள் நிலைகுலைகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால், வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன.நாய்கள் குறுக்கே பாயும் போது, 'திடீர்' பிரேக் போடும் நிலை ஏற்படுவதால், டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைகின்-றனர். எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் இப்பகுதியில் சுற்-றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தவும், அவற்றை பிடித்து வேறு பகுதிகளில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
08-Sep-2025