நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், தேவர்மலையில் பிரசித்திபெற்ற கதிர் நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த மே, 27ல் தொடங்கியது. 28ம் தேதி கொடியேற்றி பிரமோற்சவ பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடந்தன. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. முன்னதாக நரசிங்க பெருமாள் உற்சவர், திருத்தேருக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, முன்னாள் ஒன்றிய சேர்மன் செல்வராஜ் உள்பட மண்டகப்படி உபயதாரர்கள், கோவில் சிப்பந்திகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரமோற்சவ பெருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.