உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சென்டர் மீடியனால் குறுகிய சாலை: விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

சென்டர் மீடியனால் குறுகிய சாலை: விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

கரூர்: 'சென்டர் மீடியன்' வைக்கப்பட்டதால், கரூர் - திருச்சி சாலை குறுகி காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.கரூர் - -திருச்சி நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், காந்தி கிராமம் பகு-தியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இங்குள்ள வணிக நிறு-வனங்களில், 'பார்க்கிங்' வசதி இல்லாததால் சாலையோரத்தில் கார், டூவீலர்கள் போன்ற வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும், கடைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணத்தால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கரூர், காந்தி கிராமம் டபுள் டேங்க், இ.காலனி, காந்தி கிராமம் மாநகராட்சி மைதானம் ஆகிய இடத்தில் பிரிவு சாலை உள்ளது. காலை, மாலை நேரங்களில், ஏராளமான பள்ளி, கல்லுாரி வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது, பிரிவு சாலை கடக்கும் போது, சென்டர் மீடியன் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருபு-றமும் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை குறுகி போனதால், வாகன விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்றிய பின், சென்டர் மீடியனை சரியான முறையில், சரியான அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ