உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கரூர்:கரூர், பரணி பார்க் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், 32வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜான்பாஷா தலைமை வகித்தார். பரணி பார்க் கல்வி குழும அறங்காவலர் சுபாசினி மாநாட்டை துவக்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ, மாணயர், 1,858 பேர் தங்களது ஆய்வு அறிக்கையை பதிவு செய்தனர். இதில், 18 பேரின் ஆய்வு கட்டுரை திருப்பூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில், மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், அறிவியல் இயக்க மாவட்ட செயலர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !