மேலும் செய்திகள்
சென்னையில் ஹூண்டாய் அமைக்கும் எரிசக்தி ஆலைகள்
22-Nov-2024
கரூர், டிச. 15-கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பாக, தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் கொண்டாடப்பட்டது.பொது மேலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். சாலைகளில் எரிசக்தி சேமிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆலையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற டி.என்.பி.எல்., பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பொது மேலாளர் (இயந்திரவியல்) பிரின்ஸ் தொல்காப்பியன், பொது மேலாளர் (காகித உற்பத்தி) மகேஷ் ஆகியோர் பரிசு வழங்கினர்.மேலும், டி.என்.பி.எல்., பப்ளிக் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், டி.என்.பி.எல்., தொழிற்பயிற்சி நிலையம், புகழூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, புகளூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பொது மேலாளர் ராஜன்பாபு, துணை பொது மேலாளர் (எரிசக்தி) செல்வராஜ், உதவி பொது மேலாளர் சிவராமன், முதன்மை மேலாளர் (எரிசக்தி) சிவக்குமார், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
22-Nov-2024