உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பா.ஜ., சார்பில் தேசியக்கொடி பேரணி

கரூரில் பா.ஜ., சார்பில் தேசியக்கொடி பேரணி

கரூர்: கரூர் மேற்கு நகர பா.ஜ., சார்பில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசியக்கொடி பேரணி, நேற்று நடந்தது. கரூர், வேலுச்சாமிபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேலம் ரவுண்டானா வரை நடந்த தேசியக்கொடி பேரணியை, மாவட்ட செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.பேரணியில் பங்கேற்றவர்கள், ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷமிட்டபடியே சென்றனர். பேரணியில், கரூர் மேற்கு நகர பா.ஜ., தலைவர் பவானி துரை பாண்டியன், முன்னாள் செய்தி தொடர்பாளர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ