உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அரசு கலை கல்லுாரியில் தமிழ்துறை தேசிய கருத்தரங்கம்

கரூர் அரசு கலை கல்லுாரியில் தமிழ்துறை தேசிய கருத்தரங்கம்

கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கிய ஆய்வுகளின் நோக்கும், போக்கும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் சுதா தலைமை வகித்தார். புதுவை பல்கலை பேராசிரியர் ரவிக்குமார், தமிழ் இலக்கிய ஆய்வுகளின் போக்கும், நோக்கும் என்பது குறித்து பேசினார். காலை முதல் மாலை வரை பல்வேறு அமர்வுகளில் கருத்தரங்கம் நடந்தது. தமிழாய்வுத்துறை தலைவர், இணை பேராசிரியர் கற்பகம், தமிழாய்வுத்துறை இணை பேராசிரியர் சுப்பிரமணி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். தமிழாய்வுத்துறை இணை பேராசிரியர் சரவணன், உதவி பேராசிரியர்கள் நீலாதேவி, பெரியசாமி, விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை