மேலும் செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா
26-Sep-2025
கரூர், புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. அதில், மாணவர்கள் படிக்கும் காலத்தில், சமூக பணிகளை செய்வது, சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது, உயர்கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் விஜயன் விளக்கம் அளித்து பேசினார். முகாமில், மாவட்ட நாட்டு நலப்பணி தொடர்பு அலுவலர் யுவராஜா, உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி, பள்ளி ஆசிரியர்கள் சரவணன், மனோகரன், பரமேஸ்வரி, கோமதி, புவனேஷ்வரி, கஜலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Sep-2025