உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், புங்கம்பாடி கிராமத்தில், நேற்று முன்தினம் தொடங்கி, வரும், 4 வரை நடக்கிறது. கல்லுாரி முதல்வர் வசந்தி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி, அரவக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ஜெயந்தி மணி-கண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் வசந்தி பேசுகையில், ''பாதுகாப்பான முறையில் நாட்டு நலப்பணி திட்டங்களை கிராம மக்களுக்கு செய்ய வேண்டும். கிராமத்திற்கு பயனுள்ள வகையில் மாண-வர்கள் செயல்பட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ