புதிய நுாலகம் கட்ட பூஜை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் குருநாதன் கோவில் சாலை அருகே, புதிய முழு நேர நுாலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். மேலும், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளா-கத்தில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நி-லைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.