உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய ஆர்.ஐ.,க்கள் பொறுப்பேற்பு

புதிய ஆர்.ஐ.,க்கள் பொறுப்பேற்பு

குளித்தலை :குளித்தலை அடுத்த, நங்கவரம் குறு வட்ட வருவாய் கிராம ஆர்.ஐ.,யாக சுகப்ரியா மற்றும் அரவிந்தன் பொறுப்பேற்றனர்.குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக இருந்து சுகப்ரியா பதவி உயர்வு பெற்று, நங்கவரம் குறு வட்ட வருவாய் கிராம ஆர்.ஐ.,யாக பொறுப்பேற்றார். கடவூர் ஆர்.ஐ., யாக இருந்த அரவிந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தோகைமலை குறு வட்ட வருவாய் கிராம ஆர்.ஐ., யாக பொறுப்பேற்றார்.நங்கவரம் ஆர்.ஐ.,யாக இருந்த பானுபிரியா, தாசில்தார் அலுவலகத்திலும், தோகைமலை ஆர்.ஐ., யாக இருந்த முத்துக்கண்ணு சப்-கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆர்.ஐ., யாக செயல்பட்டு பணிபுரிகிறார்.புதிதாக பொறுப்பேற்ற ஆர்.ஐ.,க்கள் சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ ,தாசில்தார் இந்துமதியிடம் வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை