இனுங்கூரில் புதிய டவுன் பஸ் வழித்தடம் தொடங்கி வைப்பு
குளித்தலை, குளித்தலை அடுத்த, இனுங்கூரில் திருச்சி சத்திரம் வரை, புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.முன்னாள் யூனியன் குழு தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம் புதிய வழித்தடத்துக்கான டவுன் பஸ் சேவையை தொடங்கி வைத்தார். போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் நல்லுார் பஞ்., கொன்னாச்சிபட்டி கிராமத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். நங்கவரம் டவுன் பஞ்., திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் காந்தரூபன், நகர செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிகளையும் எம்.எல்.ஏ., மாணிக்கம் தொடங்கி வைத்தார். கவுன்சிலர்கள் வேலன், சங்கர், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.