உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேட்டு மகாதானபுரத்தில் இரவு பாட சாலை துவக்கம்

மேட்டு மகாதானபுரத்தில் இரவு பாட சாலை துவக்கம்

கரூர், டிச. 22-கரூர் மாவட்டம், கிருஷ் ணாயாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட மேட்டு மகாதானபுரத் தில், அம்பேத்கர் கல்வி இயக்கம் சார்பில், இரவு பாடசாலை துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.தமிழ்நாடு வனத்துறை மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, கிருஷ்ணாயபுரம் தாசில்தார் பிரபாகரன், துணை தாசில்தார் சந்தானம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (ஓய்வு) சேகர் ஆகியோர் பங்கேற்றனர். இதில், மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில், அம்பேத்கர் கல்வி இயக்க நிர்வாகிகள் குமார், பழனிசாமி, சுருளிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !