உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எரியாத மின் விளக்கு: வாகன ஓட்டிகள் அவதி

எரியாத மின் விளக்கு: வாகன ஓட்டிகள் அவதி

கரூர்:வாங்கல் காவிரியாற்று பாலத்தில், இரவு நேரத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.கரூர் மாவட்டம் வாங்கல்-நாமக்கல் மாவட்டம் மோகனுார் இடையே, காவிரியாற்றில் ஒரு கோடியே, 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் கடந்த, 2016ல் திறக்கப்பட்டு, மக்கள் பயன் பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் வழியாக கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில், பெரும்பாலும் விளக்குகள் எரிவது இல்லை. இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, கரூர் வாங்கல்-மோகனுார் இடையே உள்ள பாலத்தில், அனைத்து மின் விளக்குகளையும் எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை