உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரும் நவ., 17, 18ல் ஆட்சிமொழி பயிலரங்கம்

வரும் நவ., 17, 18ல் ஆட்சிமொழி பயிலரங்கம்

கரூர்:'வரும், 17, 18ல் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது' என, கலெக்டர் பிரசன்னா ராமசாமி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும், 17, 18ல் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் மொழி வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்று, தமிழ்மொழியின் தொன்மை, ஆட்சிமொழிக்கான தகுதி, மொழி வரலாறு, ஆட்சிமொழி சட்டம், வரலாறு, செயற்பாடு, பிழையின்றி தமிழில் எழுதுதல், வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கலை சொல்லாக்கம் ஆகியவை குறித்து கருத்துரை வழங்க உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை