மேலும் செய்திகள்
குடி போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
28-Aug-2024
கரூர்: வெள்ளியணை அருகே, மினி பஸ் மோதிய விபத்தில், நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை விஜயபுரம் பகுதியை சேர்ந்-தவர் வெள்ளையம்மாள், 84; இவர் நேற்று முன்தினம் மாலை, கரூர் - ஈசநத்தம் சாலை, விஜயபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த கோபால், 25; என்பவர், ஓட்டி சென்ற மினி பஸ், வெள்-ளையம்மாள் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த வெள்ளை-யம்மாள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, வெள்ளி-யணை போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Aug-2024