உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அத்தப்பூ கோலமிட்டு பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை மாணவ, மாணவியர் நேற்று கொண்டாடினர்.மத ஒற்றுமையும், மனித குல ஒற்றுமையும் முன்னிறுத்தும் படியாக, இந்த பண்டிகையானது கல்லுாரியில் கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலமிட்டு, மாணவ மாணவியர் கேரள உடை உடுத்தி, செண்டை மேளம் அடிக்க பண்டிகையை கொண்டாடினர்.பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் செண்டை மேளத்திற்கு ஏற்றவாறு நடனமாடி விழாவை கொண்டாடினர். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, பேராசிரியர்கள் செய்திருந்தனர்.இலவச பட்டா கோரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !