உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டாரஸ் லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

டாரஸ் லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

கரூர், க.பரமத்தி அருகே, டாரஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர்.கரூர், சின்னகோதுார் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 52. இவர், நேற்று மாலை காரில் மனைவி செல்வி, 44, மகள் தனுசியா, 17, ஆகியோருடன், கரூர்-கோவை சாலை க.பரமத்தி அருகே பவித்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் திடீரென நிலை தடுமாறி எதிரே நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி மீது மோதியது. அதில், காரை ஓட்டி சென்ற பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வியும், தனுசியாவும் காயமடைந்து, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை