உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திறந்த நிலையில் குடிநீர் வால்வு குழி

திறந்த நிலையில் குடிநீர் வால்வு குழி

கரூர்கரூரில், குடிநீர் வால்வு குழி திறந்த நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் நகரில், பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவில் உள்ளது. நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், அந்த பகுதியில் ஓட்டல்கள், மருத்துவமனைகள், கடைகள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில், பண்டரிநாதன் கோவில் முன், சில நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக, சிலாப் கற்கள் அகற்றப்பட்டு, குடிநீர் வால்வு குழி திறக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் குழியை மூடாமல் திறந்த நிலையில் வைத்துள்ளனர்.இதனால், இரவு நேரத்தில் பண்டரிநாதன் கோவில் தெரு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழியில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, திறந்த நிலையில் உள்ள, குடிநீர் வால்வு குழியை சிலாப் கற்கள் கொண்டு, பாதுகாப்பாக மூடி வைக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ