உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குருத்தோலை ஞாயிறு; கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

குருத்தோலை ஞாயிறு; கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கரூர்: குருத்தோலை ஞாயிறையொட்டி, நேற்று கரூரில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நடந்தது.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஜெருசலேம் நகர வீதிகளில் அழைத்து சென்றனர். அதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறை, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நேற்று கரூர் புனித தெரசம்மாள் ஆலயம், புனித லிட்டில் ஹென்றி மெமோரியல் சர்ச் உள்ளிட்ட, பல்வேறு சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி, ஊர்வலமாக சர்ச்சுகளுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை