சுங்ககேட் பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தில் பயணிகள் அமர திண்டு அமைப்பு
கரூர்: கரூர் அருகே, நிழற்கூடத்தில் பயணிகள் அமரும் வகையில், திண்டு அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.கரூர் சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில், பல ஆண்டுகளுக்கு முன், மின்-துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் கட்டப்பட்டது.அப்போது, நிழற்கூடத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. நாள-டைவில் உடைந்தும், காணாமல் போயின. தற்போது, நிழற்கூ-டத்தில் இருக்கைகள் இல்லாத அவலநிலை உள்ளது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் உட்கார முடியாமல் அவதிப்-படுகின்றனர்.குறிப்பாக, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, மாயனுார், புலியூர் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், சுங்-ககேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, மாற்று பஸ்சில்தான் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.இந்நிலையில், சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடத்தில் இருக்கைகள் இல்லாததால், முதியவர்கள் உள்பட பயணிகள் நீண்ட நேரம் உட்கார முடியாமல், தரையில் அமரும் நிலை உள்-ளது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை-யடுத்து, கரூர் சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் உள்ள, நிழற்கூடத்தில் பயணிகள் அமரும் வகையில், சிமென்ட் திண்டு அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.