ரயில்வே ஸ்டேஷனில் டிஜிட்டல் தகவல் பலகை வைக்க பயணிகள் கோரிக்கை
ரயில்வே ஸ்டேஷனில் டிஜிட்டல் தகவல்பலகை வைக்க பயணிகள் கோரிக்கைகரூர், செப். 30-கரூர் ரயில்வே ஸ்டேஷனில், டிஜிட்டல் தகவல் பலகையை சரி செய்து, மீண்டும் வைக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த, 2021 மார்ச், 25 ல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இதனால், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த, டிஜிட்டல் ஆப் செய்யப்பட்டது. பிறகு, 2021 செப்டம்பர் மாதம், தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவை முதலில் தொடங்கியது.பிறகு, படிப்படியாக ரயில் சேவை அதிகரி க்கப்பட்டு, வழக்கமான ரயில்கள் கரூர் வழியாக வந்து செல்கின்றன. இந்நிலையில், கடந்தாண்டு அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் தொடங்கியது. அப்போது, டிஜிட்டல் தகவல் பலகை அகற்றப்பட்டது. தற்போது, பராமரிப்பு பணிகள் தொடர் ந்து நடந்து வருவதால், டிஜிட்டல் தகவல் பலகை மீண்டும் வைக்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் எப்போது நிறைவு பெறும் என தெரியவில்லை.கரூர் வழியாக நாள்தோளும், 40க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. ஆனால், தகவல் பலகை இல்லாததால், ரயில்கள் வருகை குறித்த நேரம் புறப்படும் நேரம், ரயில் பெட்டிகளில் நிலை குறித்து, பயணிகளால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த டிஜிட்டல் தகவல் பலகையை, மீண்டும் வைக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.