மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு
25-Oct-2024
மருத்துவமனை விளக்குகள்பழுதால் நோயாளிகள் அவதிகிருஷ்ணராயபுரம், நவ. 10-கோவக்குளம், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விளக்குகள், பழுது ஏற்பட்டு மோசமான நிலையில் காணப்படுகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளத்தில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனை, 24 மணி நேரமும் இயங்குகிறது. மருத்துவமனைக்கு கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மருத்துவமனை வளாகம் அருகே, ஹைமாஸ் விளக்குகள் பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்டது.தற்போது, பல விளக்குகள் பராமரிப்பு இன்றி பழுது ஏற்பட்டு எரியாமல் இருப்பதால், வெளிப்புற வளாகம் இருட்டில் இருக்கிறது. மற்ற இடங்களில் இருந்து, இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, பழுது ஏற்பட்டுள்ள விளக்குகள் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Oct-2024