உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளில் அமைதி பேரணி

கரூர், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் இருந்து அமைதி பேரணி நடந்தது. மாவட்ட செயலர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, கோவை சாலை வழியாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானா வரை பேரணி நடந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். பேரணியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் அன்பரசன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.* அரவக்குறிச்சியின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட, கருணாநிதி திருவுருவப்படத்திற்கு தி.மு.க.,வினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்ட், ஷா நகர் கார்னர், மேற்கு தெரு பகுதிகளில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாநில மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில், பள்ளப்பட்டி ஷெய்கு அப்துல் காதர் தர்ஹா வளாகத்தில், சிறப்பு தொழுகை செய்யப்பட்டு, மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.* குளித்தலை மேற்கு ஒன்றியம் சார்பில், கருணாநிதி படத்திற்கு முன்னாள் யூனியன் குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான தியாகராஜன் தலைமையில் மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாஜி மாவட்ட பஞ்.. குழு துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தண்ணீர்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி