உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயிர்களை சேதப்படுத்தும் மயில் கூட்டம் வருவாய் இழந்து விவசாயிகள் தவிப்பு

பயிர்களை சேதப்படுத்தும் மயில் கூட்டம் வருவாய் இழந்து விவசாயிகள் தவிப்பு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பகுதியில் பயிரிட்டுள்ள மாதுளை உள்ளிட்ட பணப்பயிர்களை, மயில் கூட்டம் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.அரவக்குறிச்சி யூனியனில், ஈசநத்தம், புதுார், பெரிய மஞ்சுவளி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் மாதுளை பயிரிட்டுள்ளனர். தற்போது, மாதுளை காய்களை நன்கு காய்த்து வருகின்றன. இந்நிலையில், கூட்டமாக வரும் மயில்கள் மாதுளம் பழங்களை கொத்தி சேதப்படுத்துவதால், ஏராளமான பழங்கள் தரையில் உதிர்ந்து வீணாகின்றன. இதனால் மாதுளை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் மயில்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கூட்டமாக வரும் மயில்கள், பழங்களை கொத்தி சேதப்படுத்துவதால், தரையில் விழுந்து விற்க முடியாமல் வீணாகின்றன. மாதுளை மட்டுமின்றி, முருங்கை மரத்தில் மயில்கள் வேகமாக வந்து அமர்வதால், கிளைகள் ஓடிந்து வீணாகின்றன. இதேபோல், கொய்யா தோப்புகளிலும் சேதப்படுத்துகின்றன. இதேநிலை நீடித்தால், இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. மயில்களை கட்டுப்படுத்த, அரசு விரைந்து நடவடிக்தை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை