உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மக்கள் வேண்டுகோள்

சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மக்கள் வேண்டுகோள்

அரவக்குறிச்சி:கரூரிலிருந்து, சின்னதாராபுரம் செல்லும் சாலையில் அதிக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சின்னதாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில், கால்நடை வளர்ப்போர், தீவனத்துக்காக சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர். கால்நடைகள் சாலைகளில் திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளின் உரிமையாளர்கள், கண்காணித்தால் விபத்துகளை குறைக்கலாம். நெடுஞ்சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கால்நடைகளை கட்டுப்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !