உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவு குப்பை தேக்கம் மக்கள் கடும் அவஸ்தை

கழிவு குப்பை தேக்கம் மக்கள் கடும் அவஸ்தை

கழிவு குப்பை தேக்கம்மக்கள் கடும் அவஸ்தைகிருஷ்ணராயபுரம், நவ. 8-கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில், கழிவு குப்பை பல இடங்களில் தேங்கி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில் உள்ள கடை வீதி, விநாயகர் கோவில் தெரு, கொடிக்கால் தெரு, பழைய கரூர்-திருச்சி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் கழிவு குப்பைகள் சாலையோரம் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவு குப்பை காற்றில் பறக்கிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் அதிகம் காணப்படுகிறது. இதுதவிர கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே, குப்பையை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ