உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலையில் சிக்னல்பழுதால் மக்கள் அவஸ்தை

நெடுஞ்சாலையில் சிக்னல்பழுதால் மக்கள் அவஸ்தை

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிக்னல்கள், பழுது காரணமாக சாலையை கடந்து செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பஸ் ஸ்டாப் அருகில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லும் வகையில், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிக்னல் விளக்குகள் பழுது காரணமாக நெடுஞ்சாலையில் மிதமான வேகம் காட்டும் விளக்குகள் இயங்காததால், அந்த சாலை வழியாக வாகனங்கள் வேகமாக செல்கின்றன.இதனால் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையை கடந்து கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால் சிறு விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, சிக்னல் விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை