அமராவதி கூட்டுறவு அங்காடி திறக்க மக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், அமராவதி கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடியை திறக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில், அரசு கூட்டுறவு நிலையங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகங்களில், 15 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடியில் மருந்துகள் கிடைப்பதால், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். கரூரில் இயங்கும், அமராவதி சிறப்பு அங்காடியை போல் அரவக்குறிச்சியிலும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறப்பு அங்காடி திறப்பதன் மூலம், பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மளிகை பொருட்களும், இதர அன்றாட உபயோகத்திற்கு தேவையான பொருட்களும் கிடைக்கும்.தீபாவளி நேரங்களில் தரமான பட்டாசுகள், நியாயமான விலையில் அங்காடிகளில் விற்கப்படுகிறது எனவே, அமராவதி கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடியை, அரவக்குறிச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.