பஸ் ஸ்டாண்டில் எரியாத மின் விளக்குகளால் மக்கள் அவதி
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், உயர்மட்ட கோபுரத்தில் மின் விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்-றனர்.கரூர் நகரின் மையப்பகுதியில், 1984 முதல் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களின் நுழைவு வாயி-லாக உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.மேலும் தொழில் நகரான கரூரில் ஜவுளி தொழில், பஸ் பாடி கட்டும் தொழில் மற்றும் கொசுவலை உற்பத்தி தொழில்கள் நடக்-கிறது. அதில், வேலை பார்க்க ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருச்சியில் இருந்தும், ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட், 24 மணி நேரமும் பிஸியாக இருக்கும். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில் உள்ள, உயர்மட்ட கோபுரத்தில் உள்ள மின் விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால், பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டில் உள்ள, கடைகளில் எரியும் மின் விளக்குகள் வெளிச்சத்தில் சென்று வருகின்றனர்.மேலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச கழிப்பிடத்திலும், மின் விளக்குகள் எரிவது இல்லை. இதுகுறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம், கண்டுகொள்ளாமல் உள்-ளது. எனவே, கரூர் மாநகராட்சி நிர்வாகம், பஸ் ஸ்டாண்டில் உள்ள உயர்மட்ட கோபுரத்தில், மின் விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.