மேலும் செய்திகள்
13ம் தேதி 'லோக் அதாலத் '
06-Sep-2025
கரூர், கரூர் மாவட்டத்தில் வரும், 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கவுள்ளது என, மாவட்ட தலைமை நீதிபதி இளவழகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வரும், 13ம் தேதி நடக்கிறது. அதில், அனைத்து வகையான உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, வங்கி கடன் வழக்கு மற்றும் (விவாகரத்து தவிர) இதர குடும்ப நல வழக்குகள், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஏற்படும், சட்ட பிரச்னைகள் சம்பந்தமான வழக்குகள், தீர்வு காண எடுத்து கொள்ளப்படுகிறது.எனவே வக்கீல்கள், பொதுமக்கள், வங்கிகள் மற்றும் வழக்காடிகள் தங்கள் வழக்குகளை, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ள முன்வந்து, தீர்வு காணலாம். மேலும் விபரங்களுக்கு, 04324-296570 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
06-Sep-2025