க.பரமத்தியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர்: க.பரமத்தியில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரூர்-கோவை சாலையில் க.பரமத்தி உள்ளது. அதன் வழியாக, கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஏரா-ளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், சின்னதாராபுரம் வழி-யாக பொள்ளாச்சி, பழனி, கேரளா பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன. இந்த இரண்டு முக்கிய சாலைகளில், கரூர் ரூரல் மகளிர் ஸ்டேஷன், க.பரமத்தி, தென்னிலை மற்றும் சின்னதாரா-புரம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.ஆனால், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இல்லை. இதனால், போக்குவரத்து சீரமைப்பு தொடர்பான பணிகளை, சட்-டம்-ஒழுங்கு போலீசாரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே, சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசார் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இதனால், போக்-குவரத்து சீரமைப்பு பணிகளை கவனிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். எனவே, க.பரமத்தியை தலைமையிடமாக கொண்டு, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.