மக்கள் குறைதீர் கூட்டம் 444 பேர் மனு அளிப்பு
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, இல-வச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், கல்வி உதவி தொகை, திருமண நிதியு-தவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்-தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 444 பேர் மனுக்கள் அளித்தனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒரு பயனாளிக்கு, 10,250 ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள், ஒரு பயனாளிக்கு, 1,250 ரூபாய் மதிப்பீட்டிலான மடக்கு குச்சி, கண்ணாடி, 2 பயனாளிகளுக்கு தலா, 2,875 ரூபாய் மதிப்பீட்டி-லான காதொலி கருவி என மொத்தம் ஆறு பேருக்கு, 27,250 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்-திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, உதவி கமிஷனர் கலால் முரு-கேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.